
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு
ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை
கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில
பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான
வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு
விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள
நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன்
போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக்
காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே
பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை
எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க
நேரிடும்.
இந்தியாவிலே
230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை.
ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது.
இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு
சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன்
போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப்
பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <>
வடிவம் காணப்படும்.
உடலமைப்பு
தோலும் நிறமும்
பாம்பின் தோலானது செதில்களால்
சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை
உரித்து விடுகின்றன. பாம்புகளின் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின்
காரணமாக இவை மருத்துவத் துறையின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனாலாயே கிரேக்கக் குறியீடான அஸ்லெபியசின் தடியில் (Rod of Asclepius) உள்ளது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது.
பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த
அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’. பாம்பிற்கு காது மடல் இல்லை.
எலும்புச் சட்டம்
உள் அங்கங்கள்
பாம்பின் உள்ளுறுப்புகள்.
1 esophagus, 2 trachea, 3 tracheal lungs, 4 rudimentary left lung, 5 வலது நுரையீரல், 6 இதயம், 7 liver, 8 இரைப்பை, 9 air sac, 10 gallbladder, 11 pancreas, 12 spleen, 13 குடல், 14 testicles, 15 சிறுநீரகங்கள்.
பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளில் நுரையீரல்களில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது.
உணவுப்பழக்கம்
எல்லாப் பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகளை
இவை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக்
கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன.
சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.
வாழ்முறை இனப்பெருக்கம்
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம்
செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள்,
பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து
குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு
தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்பு
தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில்
குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண்
இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இனவகைகள்
பாம்பியல் அறிஞர்கள் 2,700க்கும் அதிகம் உள்ள பாம்பினங்களில் உட்பிரிவுகள் 11 என்றும் 15 என்றும் வேறுபடுகிறார்கள்.
நச்சுப்பாம்புகள்:
- நாகப்பாம்பு (நல்ல பாம்பு)
- கட்டுவிரியன்
- கண்ணாடி விரியன்
- சுருட்டைப் பாம்பு
- பவளப்பாம்பு
- வாளைக்கடியன்
- கடற்பாம்புகள்
- புடையன்
- விரைந்தோடும் ஆப்பிரிக்க கருப்பு மாம்பா (உலகிலேயே மிக வேகமாக ஊரவல்ல பாம்பு; மணிக்கு 20 கி.மீ(12.5 mph) வேகத்தில் சிறு தொலைவு ஊரவல்லவை)
மலைப்பாம்பு
- வெண்ணாந்தை
- போவா
நச்சற்ற பாம்புகள்:
- சாரைப்பாம்பு
- பச்சைப் பாம்பு
- கொம்பேறி மூக்கன்
- வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு
- ஆனைக்கொன்றான் (Anaconda) உலகிலேயே நீளமான நீர்நிலைப் பாம்பு (9 மீ)
மனித நாகரிகங்களில் பாம்பு
பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா,
எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு
வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல
தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.[1]
பாம்புக்கடி
பாம்புக்கடியால் நஞ்சு பாய்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் 8,000 பேர் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் .[2] உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது [3].
பழமொழிகள்
- பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது ஒரு கூற்று.
- பாம்பின் கால் பாம்பறியும்
பாம்புக் கடி
பாம்புகள் பொதுவாக இரையைக் கடித்துக் கொன்று உண்ணும். பெரும்பாலான
பாம்புக்கடிகள் விடமற்ற பாம்புகள் மூலமாகவே நிகழ்கின்றது. எடுத்துகாட்டாக
சாரைப்பாம்பு. பாம்பு கடித்தலும் விடத்தைப் பாய்ச்சுதலும் வெவ்வேறான
செய்கைகள். மேலும் சில சமயம் தற்காப்புக்காக மனிதர்களையும் கடிக்கக்
கூடும். விடப்பாம்புகூடக் கடித்து விடத்தைப் அடிக்காமல் இருக்கக்கூடும்.
தவிரப் பாம்பின் விடம் பல்லில் இல்லை. சரியான முதலுதவிகள் செய்வதன் மூலம்
பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளைத் தவிர்க்க முடியும்.
பாம்புக்கடியால் நஞ்சு பாய்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் 8,000 பேர் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் .[1] உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது [2].
பாம்புக் கடிக்குச் செய்யவேண்டாதவை
- கட்டுப் போடலைத் தடுத்தல் - கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் நஞ்சு (விஷம்) ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும்.
- வாய்வைத்து உறிஞ்சு வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.
- பாதிக்கப்பட்டவரை பதற்றமடையடையச் செய்யவேண்டாம் - பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தேற்றவும். கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தால் அவர்களை மதிநுட்பமாக பாம்புபைத் தேடிவருமாறே அல்லது பணிகளையோ கொடுத்தனுப்பவும்.
- காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். - ஒன்று கூரிய ஆயுதங்களால் கிழித்தால் வைத்தியரினால் பாம்பை கடித்த இடத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் தவிர பாம்புக் கடியினால் இறப்பைதை விட குருதிப் பெருக்கினால் பாம்புக் கடியினால் இறக்கூடும். தவிரப் பாவிக்கும் கிழிக்கும் ஆயுதங்கள் துருப்பிடித்திருந்தால் ஏர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
- வேறேதேனும் மருந்துகளைக் கொடுக்க வேண்டாம்.
பாம்புக் கடிக்குச் செய்யவேண்டியவை
- காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் (குழாயடி நீர் அல்லது குளியலை நீர் போன்றவை. கவனிக்க ஓடும் நீர் கிடைக்காவிடின் ஓர் வாளியில் நீரை எடுத்து காயத்தில் ஊற்றி நீரை ஓட விடவும்) சவர்காரம் (சோப்பு)(soap) போட்டு மூன்று முறை கழுவவும்.
- இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரைத் தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
- இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் பாம்பின் தலையில் அடித்துக் கொலை செய்யவேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை. பாம்பைத் தேடுவதில் நேரத்தை விரயம் பண்ண வேண்டாம். வைத்திய உதவி நோயாளிக்கே கடித்த பாம்பிற்கு அல்ல. விடப் பாம்புகளின் தலையில் <> வடிவத்தில் இருக்கும். சாதாரண விடம் அற்ற பாம்புகளின் தலை சாரைப் பாம்பு போன்றிருக்கும்.
- ஆண்டி-வெனம் என்கின்ற நச்சு எதிர்ப்பு மாத்திரைகள் பொதுவாக அரச வைத்தியசாலைகளில் வைத்தியரூடாகவே வழங்கப்படும். இவை சில அலுவலகங்களிலும் குளிர் சானதப் பெட்டிக்குள் இருக்கக்கூடும். இவை இருந்தால் அதையும் எடுத்துச் செல்லவும். எனவே வைத்தியசாலையில் இல்லாவிடின் உதவும்.
- பாம்பு கொத்திய இடத்தைத் இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து வைத்திய சாலைக்குத் தூக்கிக் கொண்டோ அல்லது வாகனமூடாகவோ 6 மணித்தியாலங்களுக்குள் எடுத்துச் செல்லவும். எவ்வளவு விரைவாகக் கொண்டு செல்லாலமோ அவ்வளவு நல்லது. 6 மணித்தியாலக் கணக்கென்பது காலில் கடித்தி்ருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு கணக்கிடப்படுவது. இதயத்திற்கு அருகில் கடித்தால் விரைவில் மரணம் சம்பவிக்கலாம்.. நடக்கும் போது குருதிச் சுற்றோட்டம் கூட விடம் உடலில் பரவும் வாய்ப்புக் கூடுவதால் நடத்தித் கொண்டு செல்ல வேண்டாம்.
- வைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்.
குறிப்பு: பாம்பின் விடம் பல்லில் இல்லை. கொத்தும் போது பாம்பின் விடம்
பாம்பின் வாய்ப் பகுதியில் இருந்து பீச்சியடிக்கப்படும். இது பாம்பின்
நிலையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் காட்டாக ஆண் பாம்பும் பெண்பாம்பும்
இணையும் நிலையில் கொத்துமானால் கூடுதல் விடத்தைக் கக்கும்.
முற்காப்பு நடவடிக்கைகள்
மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டாம் என்பது முற்காலத்தில்
இருந்து கடைப்பிடிக்கப்படுவதாகும். இதற்குக் காரணம் மூன்று பேர் ஒன்றன்
பின் ஒன்றாக ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது முதலாதாகச்
செல்பவர் பாம்பை மிதித்தால் இரண்டாவதாகச் செல்பவர் அடிஎடுத்து வைக்கும்
பொழுது படம் எடுப்பது போன்ற செய்கையை பாம்பும் பின்னர் மூன்றாவது ஆள்
போகும் போது கொத்தும் நிலையில் இருப்பார். எனவே தான் மூன்று பேராகச்
செல்லாமல் நான்கு பேராகவோ அல்லது இரண்டு பேராகவே ஒற்றையடிப் பாதையில்
செல்லவும். பாம்புக் கடிக்குள்ளாகாத சப்பாத்துக்களையும் அணியலாம்.
பாம்புக்கடி மருந்து செய்யும் முறை
- பாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர்.
- அதனால் அக்கால்நடைகளின் எதிர்ப்பு திரவங்கள் இரத்தத்தில் சுரக்க ஆரம்பிக்கும்.
- அந்த எதிர்ப்பு திரவத்தை இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்துவிடுவர்.
- அந்த எதிர்ப்பு திரவமே பாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாக செயல்படுகிறது.[3]
மூடநம்பிக்கை
- திரைப்படங்களின் வாயிலாக கடித்த பாம்பே மனிதனிடமிருந்து தன் நஞ்சை உறிந்து விடுவது போல் காட்டுவதால் மக்களிடம் பாம்பு நஞ்சே நஞ்சுக்கு மருந்தாக செயல்படுவது போல் மூடநம்பிக்கை உள்ளது.
பெரும் நான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில்
காணப்படும் மிகவும் ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும்.
ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான
இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.
அப்பாம்புகள் கீழ்வருமாறு:
- இந்திய நாகம்[1] (Naja naja)
- எண்ணெய் விரியன்[1] எனப்படும் கட்டு விரியன்(Bungarus caeruleus)
- சுருட்டைப் பாம்பு[1] (Echis carinatus)
- கண்ணாடி விரியன்[1] (Daboia russelii)
-
எண்ணெய் விரியன் அல்லது கட்டுவிரியன்
-
சுருட்டைப் பாம்பு
நன்றி-விக்கிப்பீடியா
அருமையான கட்டுரை ...நன்றி...
ReplyDelete